
திருவள்ளூர் மாவட்டம் வங்கனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2022 - 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த தனபால்(39) என்பவர் அறிவியல் பாடத்திற்கான தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ஆசிரியராக பணியாற்றிய போது அந்த பள்ளியில் படித்து வந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் தனபாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவியை காதலிப்பதாக கூறி வந்திருக்கிறார். இதனையறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக தனபாலை பணி நீக்கம் செய்தது. இருப்பினும் தனபாலன் மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை தனபாலன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவியை 40 வயது ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.