Published on 12/12/2022 | Edited on 12/12/2022
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கும் பரிந்துரை கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி கவர்னர் ஆர்.என். ரவிக்கு எழுதினார். இந்தக் கடிதத்தை முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் கவர்னரிடம் கொண்டு சென்றார்.
முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர், உதயநிதிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இந்தப் பதவிப் பிரமாணம் ஆளுநர் மாளிகையில் டிசம்பர் 14ஆம் நடைபெற உள்ளது.
ஆளுநர் மாளிகையில் டிச.14 காலை 9.30 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்பார்.