அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை மதுரையில் துவங்கினார் டி.டி.வி.தினகரன். அப்போது இந்தக் கட்சியை துவங்குவதற்கும், மதுரையில் அந்த கட்சி விழா சிறப்பாக நடப்பதற்கும் கடுமையாக உழைத்தவர்கள் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன்.

சாமி உடல்நலக் குறைவால் காலமானார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததுடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த தங்க தமிழ்செல்வன் தற்போது தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில் மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கியபோது மேடையில் டி.டி.வி. தினகரனுடன் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்த போட்டோ வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது.
-மகி