பா.ஜ.க.வுக்கு சென்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம், மீண்டும் தி.மு.க.வுக்குத் திரும்பி வந்திருக்கிறார். பா.ஜ.க. மாநிலத் தலைவராக முருகன் இருந்தபோது பேசப்பட்ட டீல்கள் நிறைவேறவில்லை என்பதுதான் செல்வத்தின் ரிட்டர்னுக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
தற்போதைய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும் திருப்தி தராததால் வி.பி.துரைசாமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் பா.ஜ.க.விலிருந்து வெளியேறும் மனநிலையில் இருக்கிறார்கள் என பாஜக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், அண்ணாமலை பற்றி மேலிடத்திடம் முருகன் அளித்துள்ள புகார்களை சி.டி.ரவியும் ஆதரித்துள்ள நிலையில், கோவையில் முருகன் பிரஸ் மீட் அளிக்க பா.ஜ.க மேலிடம் அனுமதித்தது. தமிழக பா.ஜ.க.வில் இதேநிலை நீடித்தால் அண்ணாமலையை கர்நாடகப் பொறுப்பாளராக்கி விட்டு, தமிழக பா.ஜ.வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் அதில் சீனியரான பொன்னார் முந்துவதாகவும் கமலாலயத் தரப்பில் கூறுகிறார்கள்.