Skip to main content

தி.மு.க. கூட்டணி 148 தொகுதிகளில் முன்னிலை!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

tn assembly election results dmk aliance leading

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

 

மதியம் 02.00 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 148 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 115 சட்டமன்றத் தொகுதிகளிலும், மதிமுக 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணியின் பிற கட்சிகள் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.  தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மைக்கு 118 சட்டமன்றத் தொகுதிகள் தேவைப்படும் நிலையில், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 123 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். 

 

திமுக கூட்டணியில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 17 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

 

அதேபோல் அதிமுக கூட்டணி 85 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களைச் சேர்த்து 75 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 4 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

 

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

 

இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

 

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 8 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்