Published on 25/03/2019 | Edited on 25/03/2019
சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் திங்களன்று கூட்டணிக் கட்சியினருடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார் இவருடன் திமுக அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கரன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் உடன் இருந்தனர்.