தமிழக அரசியலில் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய தேர்தலாக பார்க்கப்படுவது வருகிற மே மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தான். தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக , அமமுக ஏற்கனவே வேட்பாளர்களையும் , பொறுப்பாளர்களையும் அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இடைத்தேர்தல் வேட்பாளராகளை அறிவிக்க ரெடியாகி உள்ளார் மற்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய அட்டவணையும் தயாரித்து விட்டார்.
அணைத்து கட்சிகளும் இடைத்தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை மட்டுமே அறிவித்து இருக்கிறது இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது அதிமுகவில் சீனியர் அமைச்சர்களிடையே நிலவும் மோதல் போக்கு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது . மதுரையில் இருக்கும் அமைச்சர்களிடையே அவர்களின் ஆதரவாளர்களுக்கு தான் சீட் வேண்டும் என்று கேட்பதால் யாருக்கு தருவது என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களை முடிவு செய்யவில்லை . இதற்கு, திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்றும் மற்றும் ஒரு சில முன்னாள் அமைச்சர்களும் சீட் கேட்பதால் யாருக்கு தருவது என்ற சிக்கலில் அதிமுக உள்ளதாக கூறப்படுகிறது.