Skip to main content

''தமிழகத்தில் எதைச் செய்தாலும் அரசியலாக்குகிறார்கள்''- எல்.முருகன் பேட்டி!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

l murugan

 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால் தமிழகச் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதைச் செய்தாலும் அரசியலாக்குவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. வேளாண் திருத்தச் சட்டங்களை எந்த விவசாயியும் எதிர்க்கவில்லை. இரண்டு மாநிலங்களைத் தவிர எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. குறிப்பாகத் தமிழகத்தில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். தேவையே இல்லாமல் சட்டமன்றத்தின் நேரத்தை வேஸ்ட் செய்து எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்'' என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மோடியின் பெயரில் போதை மாத்திரை; பாஜக நிர்வாகிக்குச் சம்மன்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Narcotic pill in Modi's name; Summons to BJP executive

தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவருக்கு கிடுக்குப்பிடி  போட்டிருக்கிறது தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை.

தென் சென்னை பாஜகவின் மாவட்டத் தலைவராக இருக்கிறார் காளிதாஸ். இவர் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மத்திய மோடி அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனஉஷாதி கேந்திரா) எனும் மருந்துக் கடையைத் தனது மனைவியுடன் இணைந்து  நடத்தி வருகிறார் காளிதாஸ்.

பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் இந்த மருந்துக் கடை குறித்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் போயிருக்கிறது. இதனையடுத்து, இந்தப் புகாரின் மீது சென்னை மண்டலம்-lll இல் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் நடத்திய  விசாரணையில், அந்த மருந்துக் கடையில் காலாவதியான மருந்துகள் இருப்பதும், போதை மாத்திரைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Narcotic pill in Modi's name; Summons to BJP executive

இதன் தொடர்ச்சியாக, காளிதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சென்னை சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் கோர்ட்டில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆஜராக காளிதாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கிய நிலையில், கமலாலயத்திற்கும் செய்தி பரவ, பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

நள்ளிரவு வரை நடந்த விவாதம்; ராகுலின் சில பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்  

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
The debate lasted till midnight; Some of Rahul's speeches have been removed from the notes

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.