தேனி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அஇஅதிமுக வேட்பாளராக ரவீந்திரநாத் குமார், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இன்று இரண்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,
மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று யாரும் புகார் கொடுக்கவில்லை. யாராவது புகார் கொடுத்தால்தான் மறுவாக்குப்பதிவு வைக்க வேண்டும். தேர்தல் ஆணையமே தனியாக ஒரு முடிவு எடுத்து, முதல் நாள் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கியது. என்ன காரணம் என்று கேட்டால் ஒன்னும் சொல்லவில்லை. அடுத்த நாள் இரண்டு பூத்துக்கு மறுவாக்குப்பதிவு என்கிறார்கள். அதற்கு பிறகு 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது. மக்கள் வாக்களித்துள்ளனர். பார்ப்போம்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் மறுவாக்குப்பதிவு யாரும் கேட்கவில்லை நடத்துகிறார்கள் என்றார். மேலும் பேசும்போது நம்ம தங்க தமிழ்ச்செல்வனும் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். கூட்டணி உடன்பாடு எதுவும் ஏற்பட்டிருக்கிறதா?
அண்ணன் பெரிய மனுஷன் நல்லாத்தானே சொல்லியிருக்கிறார். நம்ம தங்க தமிழ்ச்செல்வன் என்றுதானே சொல்லியிருக்கிறார். இதில் என்ன இருக்கு. விரோதமா எதுவும் சொல்லலியே. அவருடைய பெருந்தன்மையை பாராட்டுங்கள்.
ஆதரவாளரா மாத்தணுமுன்னு முயற்சி பண்றாரா?
அது 23ஆம் தேதிக்கு பிறகு தெரியும்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கும்போது மோடியை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்படுகிறோம் என்கிறார். டிடிவி தினகரன் கட்சியும் அதுபோன்ற சந்தர்பத்தை எடுக்குமா?
பொதுவாக எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெளிவாக சொல்லியிருக்கிறார். வாழ்நாளில் பிஜேபியுடன் கூட்டணி இல்லைன்னு. இதுபோல எந்த தலைவரும் சொன்னதில்லை தமிழ்நாட்டுல...
இவ்வாறு கூறினார்.