Skip to main content

சென்னை வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

கொரானா பரவைலைக் கருத்தில் கொண்டு நாட்டின் நலன் கருதி சென்னை வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
 

போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் போராட்டம் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து 33 நாட்களாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

chennai - washermanpet



 

மத்ரிய அரசு CAA NRC NPRஐ திரும்பப் பெறவேண்டும், தமிழக அரசு அவற்றை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 

தமிழக அரசு நம்முடைய போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தினை வீரியமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
 

ஆயினும் உலகெங்கிலும் தற்சமயம் பரவி வரும் கொரானா நோய்த் தொற்று தற்பொழுது இந்தியாவையும் வெகுவாக தாக்கத் தொடங்கியுள்ளது.


 

 

இந்த அசாதாரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் CAA NRC NPRக்கு எதிரான தொடர் போராட்டத்தினை தற்காலிகமாகத் தள்ளி வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தற்காலிக முடிவு தான். எதிர்வரும் காலத்தில் மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை வீரியமாகப் போராட்டத்தினை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

இது நாள் வரை போராட்ட களத்தில் வீரியமுடன் முன்னின்ற பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் போராட்டக் குழு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  



 

சார்ந்த செய்திகள்