Skip to main content

ஒரணியில் திரள வேண்டிய... தமிமுன் அன்சாரி 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 


இன்று இந்தியாவின் 17 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகி பல்வேறு புதிய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒரு வகையான மனநிலையும், வட இந்தியாவில் ஒரு வகையான மனநிலையும் நிலவுவதை இத்தேர்தல்  முடிவுகள் வெளிக்காட்டுகிறது.

 

thamimun ansari



 

இந்தி பேசும் மாநிலங்களில், அப்பகுதி மக்கள் அளித்திருக்கும் வாக்குகள் முழு இந்தியாவையும் உள்ளடக்கிய வெற்றியை பாஜக கூட்டணிக்கு கொடுத்திருக்கிறது.
 

காங்கிரஸ் கட்சி முற்போக்கான தேர்தல் அறிக்கையை தந்து, நல்லிணக்கமான அரசியலை முன்னெடுத்து பரப்புரை செய்த நிலையிலும், அக்கட்சி பின்னடைவை சந்தித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.
 

அது போல தேசிய அளவில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கவலையளிக்கிறது.
 

இனி வரும் காலங்களில் இந்தியாவின் பன்மை கலாச்சாரம், சமூக நீதி கொள்கைகள், சுதந்திர அரசியல், மாநில உரிமைகள் ஆகியவற்றுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது.
 

 இத்தேர்தல் முடிவுகள் மூலம் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள், பன்மை கலாச்சாரம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் மாநில கட்சிகள் ஆகியவை ஒரணியில் திரள வேண்டிய காலச் சூழல் உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை. 
 

பல மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும்,இத்தேர்தல் முடிவுகளை அனைவரும் அமைதியாக ஏற்க வேண்டும் என்பதே ஜனநாயக பண்பாகும்.


 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

வெற்றிப் பெற்றவர்கள் நிதானத்துடன் அனைவரையும் மதித்து பணியாற்ற வேண்டும் என்றும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நம்பிக்கையோடு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்