Published on 06/07/2019 | Edited on 06/07/2019
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும், ராஜ்யசபாவில் தான் நினைக்கும் தீர்மானங்களையும் சட்டத் திருத்தங்களையும் நிறைவேற்ற, அது மேலும் பலம் பெறவேண்டிய நிலையில் இருக்குது. அதனால்தான் எதிர்க்கட்சி எம்.பி.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் மும்முரம் காட்டுது. அந்த வகையில், தெலுங்கு தேச எம்.பி.க்கள் 6 பேரில் 4 எம்.பி.க்களைத் தங்கள் பக்கம் பா.ஜ.க. அண்மையில் இழுத்துக்குச்சு. இந்த எண்ணிக்கையால் கட்சித்தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிச்சிட்டாங்க என்று கூறுகின்றனர். இதனையடுத்து பாஜகவின் பார்வை, தங்கள் ரிமோட்டுக்கு ஆடும் அ.தி.மு.க. பக்கம்தான் இருக்கு.
இப்ப அ.தி.மு.க. வுக்கு புதுவையையும் சேர்த்து 13 ராஜ்யசபா எம்.பி.க் கள் இருக்காங்க. இதில் 4 பேரோட பதவி காலியாகுது. வர்ற 18-ந் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. தரப்புக்கு 3 சீட் கிடைக்கும். அதில் பா.ம.க.வுக்கு ஒண்ணு கொடுத்தா, அ.தி.மு.க.வுக்கு நேரடியா 2 சீட் கிடைக்கும். அதன் மூலம் அ.தி.மு.க. எண்ணிக்கை 11 ஆயிடும். இந்த நிலை யில், ராஜ்யசபாவில் பலத்தை அதிகரிக்க நினைக்கும் பா.ஜ.க. தலைமையோ, அ.தி.மு.க.விலிருந்து 10 பேரை தங்கள் பக்கம் கொண்டுபோக ப்ளான் போட்டு காய் நகர்த்துது. இப்பவே 3 அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.க்கள் சிக்கியிருக்காங்கன்னு டெல்லி தகவல் சொல்லுது. இன்னும் சில பேர் தாவ தயாராயிட்டாங்கனும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.