Skip to main content

கவர்னராகும் தமிழக பாஜக வேட்பாளர்?

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியை சந்தித்தது.இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இருந்தாலும் தமிழகத்தில் இருந்து ஒருவர் விரைவில் மிஸோரம் மாநிலத்தின் கவர்னராகப் போகிறார்ன்னு டெல்லியில் இருந்து தகவல் வருது. அது வேறு யாருமல்ல. குமரியில் தோல்வியைத் தழுவிய முன் னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். தமிழக பா.ஜ.க.வின் சீனியரும் மேல்மட்டத்துடன் நல்ல தொடர்பில் இருப்பவருமான அவருக்கு தரப்படும் மரியாதையாம் இது. 
 

bjp candidates


அதேபோல், கேரள கவர்னராக இருக்கும் நீதிபதி சதாசிவம், மத்திய அமைச்ச ரவையில் இடம்பெறுவார் என்ற செய்தியும் பரவியது. அடுத்தடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க லாம்னு தெரியுது. நிர்மலா சீதா ராமன், ஜெய்சங்கர்னு தமிழ் நாட்டைப் பூர்வீகமா கொண்ட வங்க புதிய அமைச்சரவையில் இருந்தாலும், தமிழ்நாட்டோடு தொடர்புடையவர்ங்கிற முறை யில் சதாசிவத்துக்கு அடுத்த கட்டமா சான்ஸ் தரப்படலாமாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்