Skip to main content

தமிழ்நாடு பட்ஜெட்; இபிஎஸ் ஒற்றை வரி பதில்!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Tamil Nadu Budget; EPS is a single line answer!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார். 

 

2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன் வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையை துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். 

 

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “23 மாத திமுக ஆட்சியில் 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள். மூன்று முறை பட்ஜெட் தாக்கலிலும் வரிகளை உயர்த்தியுள்ளார்கள். 23 மாத கால ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளார்கள்.

 

திட்டம் அறிவித்துள்ளார்கள்; திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், நிதிப் பற்றாக்குறையைக் குறைத்ததாக சொல்கிறார்கள். ஜிஎஸ்டி, கலால் வரி உயர்ந்துள்ளது. பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல், சாலை வரி உயர்ந்துள்ளது. வரி வருவாய் உயர்ந்துள்ளது. பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். ஆனால், 30 ஆயிரம் கோடியாகப் பற்றாக்குறையைக் குறைத்ததாகச் சொன்னது வேடிக்கையாக உள்ளது. பின்தங்கிய ஆதிதிராவிட மக்களுக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்தாண்டு குறைக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

 

மகளிருக்கு உரிமைத் தொகையாக 1000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படுவதாகச் சொன்னார்கள். ஆனால், இப்பொழுது தகுதியான குடும்பத் தலைவிகளைத் தேர்ந்தெடுத்து மாதந்தோறும் 1000 ரூபாய் என்கிறார்கள். எந்த அடிப்படையில் தகுதியைத் தீர்மானிக்கிறீர்கள். 7000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்கள். அப்படிப் பார்த்தால் சுமார் 1 கோடி பேருக்கு கொடுக்க முடியுமா? அது கூட சரியாகத் தெரியவில்லை.  ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்