Skip to main content

முடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக் கழகத்திற்கு பாராட்டுகள்! -ராமதாஸ் ட்வீட்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

ramadoss

 

பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று முடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக் கழகத்திற்கு பாராட்டுகள் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

 

தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை பல்கலைக்கழகத்தில் பாடவேளைகள் குறைப்பு ரத்து செய்யப்படுகிறது; ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று முடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக் கழகத்திற்கு பாராட்டுகள்!

 

தமிழ் மொழி தாய்க்கு இணையானது. பல்கலைக்கழகங்கள் எத்தனை புதுமைகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தாயை எப்படி ஒதுக்கி வைக்க முடியாதோ, அதேபோல், கல்வித்திட்டத்தில் தமிழ் மொழியை ஒதுக்கி வைக்கக் கூடாது; ஒதுக்கிவைக்க முடியாது என்பதை பல்கலைக் கழகங்கள் உணர வேண்டும்!

 

கல்லூரி மாணவர்களின் ஆங்கிலத் திறனை அதிகரிக்கும் பல்கலைக்கழகங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது தான். அதற்கான கூடுதல் பாடவேளைகளை உருவாக்கி ஆங்கிலத் திறன் வகுப்புகளை பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நடத்த வேண்டும்! இவ்வாறு கூறியுள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்