![Avadi MLA office open by Udhayanithistalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/UUIEGn2D_NfRH3Z0EbKFhDbMn56YUNeFhquy_KCO95E/1626521464/sites/default/files/2021-07/th-7_8.jpg)
![Avadi MLA office open by Udhayanithistalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/yIBJxIdETawZ95IX9xFTN2Jax2eA7VBHlV707SNMo-A/1626521464/sites/default/files/2021-07/th-5_8.jpg)
![Avadi MLA office open by Udhayanithistalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xhvm77uo9pJezi9y3qczEWxC7syoSlI0Ty4Q8Wnuogo/1626521464/sites/default/files/2021-07/th-4_10.jpg)
![Avadi MLA office open by Udhayanithistalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/KRo7vLIwyvBBLwc14nuIbM4d7F7UBOz0Z4fklmWi-ic/1626521464/sites/default/files/2021-07/th-2_16.jpg)
![Avadi MLA office open by Udhayanithistalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/P1pYizYuSMz8Gdymp6okSOM0_u6faxGhEs6-1LuLjp0/1626521464/sites/default/files/2021-07/th_14.jpg)
![Avadi MLA office open by Udhayanithistalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/7HDzQ6lMr9R2V8_ZrmgQgvbTHUgGLDINYmeGkgIPwCY/1626521464/sites/default/files/2021-07/th-1_13.jpg)
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசரும், அதிமுக சார்பில் பாண்டியராஜனும் போட்டியிட்டனர். இதில், ஆவடி சா.மு.நாசர், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், இவர் தற்போதைய பால்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று ஆவடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தையை திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி இணைய வழி கல்வி கற்க கை கணினியை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி பகுதி பொறுப்பாளர்கள் ஜி.ராஜேந்திரன், ஜி.நாரயாணபிரசாத், பேபி.வி.சேகர், பொன்.விஜயன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள், பொறுப்பு குழு உறுப்பினர்கள், வார்டு நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.