அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜெயக்குமார், ''எஸ்.வி.சேகர் உண்மையிலேயே மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா இவரை அடையாளம் காட்டினார். அந்த தொகுதியில் இவர் எந்த கொடியை காட்டி ஓட்டு வாங்கினார். அதிமுக கொடி, அண்ணா பெயரை சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து வருட சம்பளத்தை திரும்ப கொடுத்துவிட வேண்டும். அதிமுக கொடியை காட்டி ஓட்டு வாங்கினேன். இந்த சம்பளம் எனக்கு தேவையில்லை என்று அரசிடம் திரும்ப கொடுத்திட வேண்டும். இரண்டாவது, எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் வருகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள்''. இவ்வாறு கூறினார்.