ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசியது...
நாட்டின் பிரதமர் மோடி இந்த 13 பேர் துப்பாக்கிச்சூடு மட்டுமல்ல ஆந்திரா காட்டுக்குள்ள 20 பேரை சுட்டுக் கொன்ற போதும் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. தம்பி பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இங்கே நூற்றுக்கக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், அதற்கும் வருத்தம் தெரிவிக்கவில்லை. அனிதா மரணத்திற்கு உலகமே அழுதுச்சு, வாய் திறந்து சொல்ல வேண்டாம், சுட்டுச் செய்தியிலாவது (twitter) சொல்லலாம்ல... அதுவும் இல்ல. ஒரு பெண் உலக அழகிப் பட்டம் பெற்று வரும்போது சுட்டு செய்தியில் வாழ்த்துத் தெரிவிக்கிறார். அதே மாதிரி ஒரு சுட்டுச் செய்தியில் தெரிவித்தார் என்றால் அவர் கவனத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைப்போம். அதை செய்யமாட்டார். தமிழர்கள் சாவில் அவர்களுக்கு சந்தோஷம் இருக்கு. அவர்களுக்கு எங்கள் மரணம் இனிக்குது, கண்ணீர் இனிக்குது, இரத்தம் சுவையாக இருக்கு. அதனால்தான் நாங்கள் தொடர்ச்சியாக மரணத்தை எதிர்கொண்டு இருக்கிறோம். வருத்தம் தெரிவிக்கல, தெரிவிக்கமாட்டார்.
இலங்கையில் முன்பை விட மிகக் கொடுமையான சூழலில்தான் என் மக்கள் அந்த நிலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போ எங்கள் தாய் நிலத்தில் நாங்கள் குடி இருந்தோம். இப்போ சிங்கள குடியேற்றங்கள். பல இடங்களில் புத்தர் கோவில் கட்டப்படுகிறது. 10,000க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவப் படைகளை தமிழர் நிலத்தில் குடி அமைத்து இருக்கிறது. தமிழர்க்கு என்று தாய் இனம் இருக்கக் கூடாது என்று நினைத்து முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. 2 லட்சத்து 40 ஆயிரம் ராணுவ துருப்புகள் என்றால் அதில் 2 லட்சம் பேர் நம் நிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடிமகனுக்கு 4 ராணுவ வீரர்கள் என்றால் அவர்கள் எப்படி சுதந்திரமாக நடமாட முடியும்? அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் என்பதை நாம் கவனித்து பார்க்க வேண்டும். முன்பை விட மோசமான சூழலில்தான் ஈழத்தில் நமது உறவுகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
எஸ்.வி.சேகரை என் கைது செய்யவில்லை என்று தெரியவில்லை. உயர்நீதிமன்றம் சொல்லியும் இந்த அரசு அவரைப் பாதுகாக்குது, காரணம் உங்க எல்லாருக்கும் தெரியும்.