Published on 24/06/2021 | Edited on 24/06/2021

இந்தியா முழுவதுமுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை தலைவர்கள் கலந்துகொண்ட காணொளி கூட்டம் நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்துகொண்டு புதுச்சேரி அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து கரோனா நடவடிக்கைகள் குறித்தும், தற்போது உள்ள சட்டமன்றம் மிகவும் பழமையானது என்றும், புதிதாக கட்டப்படவுள்ள சட்டமன்றத்திற்கு 220 கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.