குமரி மாவட்ட சிஐடியு 12வது மாவட்ட மாநாடு கடந்த 3 தினங்களாக தக்கலையில் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று மாலை மேட்டுக்கடை பள்ளி வாசலில் இருந்து தொடங்கிய செங்கொடி பேரணி தக்கலை அண்ணாசிலை அருகில் முடிவடைந்தது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசு புதிய கல்வி கொள்ளை என்கிற பெயரில் பழங்கால கல்வி முறையை கொண்டு வர முயற்சிக்கிறது. அவசர மசோதாக்களை கொண்டு வந்து அவசர அவசரமாக நிறைவேற்றுகிறது. கடந்த ஆட்சியில் மக்களவையில் நிறைவேற்றபட்ட பெரும்பாலான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிற அரசாக பாஜக அரசு உள்ளது. எம்எல்ஏக்களை 100 கோடி கொடுத்து விலைக்கு வாங்குகிறார்கள். மத்திய அரசின் பல்வேறு சட்ட திருத்த மசோதாக்களால் 10 ஆயிரம் கோடி சிறு தொழில்கள் பாதிக்கபடும் என்றார்.