அ.தி.மு.க. பொதுக்குழு வரும் 15ஆம் தேதி வாக்கில் கூடப் போவதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, பொதுக்குழுவில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இருக்காது என்கிறார்கள்.
ஏன் என்று மேலும் விசாரித்தபோது, ’சட்டமன்றக் கூட்டம் வரும் 10-ஆம் தேதிவரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவைக் கூட்ட அ.தி.மு.க. முடிவெடுத்திருக்கு. ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி ஆகியோரின் கட்சிப் பதவிகளில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இருக்காது என்பதால் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், பெரிதாக எந்தவிதமான காரசாரமும் இருக்காது. ஆரம்பத்தில் பொதுக்குழுவில் தன் வித்தையைக் காட்டி, ஓ.பி.எஸ்.சை ஓரம்கட்டிவிட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், தனக்கு ஜூன், ஜூலை வரை நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டதால், அவர் சைலண்ட் மோடில் இருக்கிறார்’ என்கின்றனர் அதிமுக தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள்.