Skip to main content

தினகரனைத் தான் இனி நம்பணும்... அவர்களால் நமக்கு எந்தக் கவலையும் இல்லை... குஷியில் ஓபிஎஸ், இபிஎஸ்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

admk


நீதிமன்றம் தற்போது, சசிகலா தரப்பு மணுவைத் தள்ளுபடி செய்து, ஆளும்கட்சியான எடப்பாடித் தரப்புக்கே இரட்டை இலை எனக் கூறியது. அதனால் சசிகலா தரப்பு தற்போது படு அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை சசிகலா வசம் இரட்டை இலைச் சின்னம் வந்திருந்தால், எடப்பாடி, ஓபி.எஸ். தரப்புக்குப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும் என்று கூறுகின்றனர். அதனால் எடப்பாடி, ஓ.பி.எஸ், உள்ளிட்ட அ.தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் தற்போது பெரிதாக நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துவிட்டனர். 
 

மேலும்  இரட்டை இலை சசிகலா தரப்புக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால், எடப்பாடி தரப்பு நிறைய சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்திருக்கும். குறிப்பாக, இலைச் சின்னத்தை வைத்தும், வெற்றி பெற்ற இடைத்தேர்தல் எனத் தொடங்கி, நாடாளுமன்றம், உள்ளாட்சி வெற்றிகள் வரை, சட்டரீதியாக கேள்விகளுக்கு உள்ளாகியிருக்கும். அதனால், சசி தரப்பால் இனி நமக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது எனும் தெம்பில் எடப்பாடி தரப்பு இருக்கின்றனர். அ.தி.மு.க.வை மறந்துவிட்டு, அ.ம.மு.க. தினகரனைத் தான் இனி அவர் நம்பியாக வேண்டும் என்ற பேச்சுகளும் அங்கே ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில், சசிகலா தரப்பிலும் டெல்லியுடன் டச்சில் இருப்பதால், அவர் ரிலிஸ் ஆன பிறகு, அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று மந்திரிகளே எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்