Skip to main content

ஜார்கண்டில் ஆட்சியைத் தக்க வைக்கும் ‘இந்தியா’ கூட்டணி!

Published on 23/11/2024 | Edited on 23/11/2024
 India alliance to retain power in Jharkhand

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு  நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணிக்கும், ஜார்கண்ட் முக்கி மோர்ச்சா (ஜெ.எம்.எம்.) - காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜார்கண்டில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 41 ஆகும். இத்தகைய சூழலில் மதியம் 12.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 30 இடங்களிலும், ஜெ.எம்.எம். - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக ஜெ.எம்.எம். கட்சி 29 இடங்களிலும்,  காங்கிரஸ் 14 இடங்களிலும்,  ராஷ்டிரிய ஜனதா தளம் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதே சமயம் 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பாஜக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  இதன் மூலம் ஜார்கண்ட்டில் ஜெ.எம்.எம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டியும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் முன்னிலை வகித்தும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பர்ஹெய்ட் தொகுதியில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஜெ.எம்.எம். கட்சியின் வேட்பாளருமான ஹேமந்த் சோரன் முன்னிலை வகித்து வருகிறார். கேண்டி தொகுதியில் தொகுதியில் ஜெ.எம்.எம். கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். டும்கா தொகுதியில் போட்டியிட்ட ஜெ.எம்.எம். கட்சியின் வேட்பாளர் பசந்த் சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ராஞ்சியில் போட்டியிட்ட ஜெ.எம்.எம். கட்சியின் வேட்பாளர் மகுவா மாஜி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வரும், செராய் கெல்லா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான சம்பாய் சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஜம்தாரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சீதா சோரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தன்வர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாபுலால் வ்மாரண்டி முன்னிலை வகித்து வருகிறார். லோஹர்தாகா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமேத்வர் ஓரான் முன்னிலை வகித்து வருகிறார். ஜம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பன்னா குப்தா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்