Skip to main content

“காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது” - ஜெய்ராம் ரமேஷ்

Published on 23/11/2024 | Edited on 23/11/2024
Jairam Ramesh says about maharashtra assembly election

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்தித்தது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டது. 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், இன்று (23-11-240 காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 51 இடங்களில் மட்டுமே முன்னிலை வருகிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 132 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

அதே போல், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “முடிவுகள் எதிர்பாராதவை மற்றும் மிகவும் ஆச்சரியமானவை. நமது தலைவர்கள் ஒவ்வொருவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தலுக்கு பின் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள். அவர்களுக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுப்பப்பட்டதில்லை. அவர்களில் மூத்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, நிர்வாக இயந்திரமும் அவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, பா.ஜ.க. மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு பங்கு உள்ள மாநிலம் இல்லை” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்