Skip to main content

“சசிகலாவின் தலைமையை ஏற்கத் தயார்!" - ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் அதிரடி !

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

"Ready to accept Sasikala's leadership!" - OPS  to Supporters!

 

எடப்பாடியை வீழ்த்த சசிகலாவுடன்  பயணிக்கத் தயார் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். தன்னை சந்தித்த சசிகலா ஆதரவாளர்களிடம் இப்படி மனம் திறந்து பேசியுள்ளார். 

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை தீவிரமாகி வரும் நிலையில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் வரிந்துகட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், அதிமுகவில் இருந்து தன்னை ஓரம் கட்டுவதை உணர்ந்துகொண்ட ஓ. பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களோ, திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என கூறியுள்ளனர். இந்த நிலையில், சசிகலாவின் ஆதரவாளரும் அதிமுகவின் முன்னாள் தென்சென்னை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ஆவின் வைத்தியநாதன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  

 

"Ready to accept Sasikala's leadership!" - OPS  to Supporters!

 

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆதரவு நியூஸ் ஜெ தொலைக்காட்சியை அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவிற்கு தாரைவார்த்து விட்டனர். எதிர் காலத்தில் கட்சியையும் தாரைவார்த்து விடுவார்கள். நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் சி.இ.ஓ.வாக ராஜவேலு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களான நாங்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறோம். கே.பி. முனுசாமி,  சி.வி சண்முகம் இடையே பல குவாரிகள் கை மாறியுள்ளதால் இருவரும் ஒற்றுமையாக உள்ளனர். நியூஸ் ஜெ தொலைக்காட்சி அதிமுக தொண்டர்களின் பணத்தால் உருவானது.

 

சசிகலாவின் எண்ணம் தொண்டர்களின் மனநிலையை சார்ந்ததுதான். இப்போது மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் இதுவரை எப்போதும் சசிகலாவை ஆதரிக்க மாட்டேன் என சொன்னதில்லை, இன்று சந்தித்த எங்களிடம், 'சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார்' என ஓபிஎஸ் கூறியுள்ளார்.


எடப்பாடிக்கு பதிலாக சசிகலாவின் தலைமையை ஏற்கலாம் என ஓபிஎஸ் கூறியுள்ளார். சசிகலாவின் எண்ணம், கட்சி ஒன்றாக வேண்டும் என்பது தான். தேவைப்பட்டால் சசிகலாவை கண்டிப்பாக ஓபிஎஸ் சந்திப்பார். சசிகலா விரும்பினால் ஓபிஎஸ்சுடன் அவரையும் சேர்த்து பொதுக் குழுவிற்கு அழைத்துச் செல்வோம். சசிகலா ஆதரவாளர்கள் நாங்களும் பொதுக்குழு செல்வோம்" என்றார் வைத்தியநாதன். 


இதனால் 23-ந்தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில் பரபரப்புக்கும் பதற்றத்திற்கும் பஞ்சமிருக்காது என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்