மதுரை தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம் பெறாததை கவனித்து நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரே, நீங்கள் சித்தப்பா என்று அழைத்தீர்களே, எம்.ஜி.ஆர். அவரின் புகைப்படம் உலகத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது உங்கள் கவனத்திற்கு வந்ததா என நான் பணிவுடன் கேட்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் திமுக வளர்ச்சிக்கு உழைத்தாரே அவரின் உருவப்படத்தை அகற்றுவது ஞாயம் தானா?
கள ஆய்வில், எம்.ஜி.ஆரின் புகைப்படம் எங்கே எனும் கேள்வியை வைத்தால் உண்மையில், நீங்கள் எம்.ஜி.ஆர். மீது மதிப்பு, மரியாதை, நன்மதிப்பு வைத்திருப்பவர் என்று எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.