Published on 24/03/2019 | Edited on 24/03/2019
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. சிவகங்கை தொகுதியை தவிர 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் டாக்டர் ஏ.செல்லகுமார், கன்னியாகுமரி வேட்பாளர் எச்.வசந்தகுமார், ஆரணி தொகுதி வேட்பாளர் விஷ்ணு பிரசாத், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் கே.ஜெயக்குமார், திருச்சி தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.