Skip to main content

மத்தவங்களையும் கவனிங்க... நெருக்கடியில் ராமதாஸ்...

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்தது. ஏழு மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்குவதாக அதிமுக-பாமக இடையே கையெழுத்தானது. தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்தது. பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. 


  Ramadoss


''அதிமுக - பாஜக மீது மக்கள் கோபமாக இருப்பதால் இந்த கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. பிரச்சாரத்தின்போது கட்சியினரே இந்த கூட்டணியை விரும்பவில்லை'' என்று தேர்தலுக்கு முன்பே சில நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் சொல்லியுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ''அன்றே சொன்னோமே கேட்டீங்களா?'' என ராமதாஸ் காதில் விழும்படியே நிர்வாகிகள் பேசுகிறார்களாம். 


 

தர்மபுரியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக அளித்த ராஜ்யசபா பதவி உத்தரவாதத்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரை சிபாரிசுக்காக பேசி வருகிறார். இதனிடையே பாமகவிலோ, ''தொடர்ந்து அன்புமணிக்கே சீட் கொடுக்காமல், கட்சியில் உள்ள மத்தவங்களையும் கவனிங்கன்னு'' ராமதாஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். பாமக பிரமுகர்கள் முரண்டு பிடிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்