Published on 04/12/2020 | Edited on 04/12/2020

அரசியல் கட்சி துவக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் ரஜினி. இதனை தொடர்ந்து, தனது மக்கள் மன்றத்தின் தலைமை மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியை நியமித்தார்.
இந்த நிலையில், கட்சி துவக்குவதற்கான அடுத்தக்கட்ட பணிகளையும், அரசியல் பணிகளையும் கவனிப்பதற்காக கட்சிக்கென தலைமை அலுவலகம் தேவைப்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்ற ரஜினி அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து, ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணிகள் துவக்கப்படவிருக்கிறது. இதில், தமிழருவி மணியனுக்கும், அர்ஜுனமூர்த்திக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பணிகளை துவக்க உத்தரவிட்டுள்ளாராம் ரஜினி!