Skip to main content

'அரசியல் அற்புதம் நிச்சயம் நிகழும்' - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

சில தினங்களுக்கு முன்பு போயஸ் கார்டன் இல்லத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வருங்கால முதல்வர் எனச் சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும்" என தெரிவித்தார்.

 

Rajinikanth about political point

 



அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிய புதிய அறிவிப்பை அவர் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதுமட்டும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு பதவி, 65 சதவீதம் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற மூன்று திட்டங்களை   தெரிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போதுசென்னை எம்.ஆர்.சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், " அரசியலில் நான் வைத்த புள்ளி அலையாக மாறியது, தற்போது சுழலாக உள்ளது. விரைவில் சுனாமியாக மாறும். நான் சொன்ன அரசியல் அற்புதம் நிச்சயம் நிகழும்" என தெரிவித்துள்ளார். அவர் சொன்ன அரசியல் அற்புதம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்