புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் திமுக மாநில அமைப்பாளர்கள் சிவகுமார், சிவா மற்றும் தோழமை கட்சியினர், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஜானகிராமன் உடல் அவரது சொந்த ஊரான மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசின் சார்பில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி மற்றும் எம்எல்ஏக்கள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.