பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் உயர் நீதிமன்றம் 6-ந் தேதி ரத்து செய்துள்ளது. இருவரும் எடப்பாடிக்காகத் தான் எல்லாம் செய்தோம் என விசாரணைக் கமிட்டியிடம் சொன்னது தான் குண்டாஸ் ரத்தாக காரணம் என்கின்றனர்.


அவர்களின் இந்த வாக்குமூலப் பதிவு எடப்பாடித் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாங்கள் வெளியே வந்ததும், தாங்கள் மீடியாக்களிடம் பேச எடப்பாடி தரப்பு வாங்கி வைத்திருக்கும் நீதிமன்றத் தடை உத்தரவை உடைக்கவும், உச்சநீதிமன்றத்திலும் எடப்பாடிக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் சட்டரீதியான முயற்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.