Published on 12/08/2019 | Edited on 12/08/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. இதில் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாவிற்கும் பாமக அமைதி காத்து வருவதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் பாஜக அரசு மருத்துவ மசோதா கொண்டு வந்தது. இதற்கு எதிராக தேசிய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி தீவிரமாக எதிர்த்து போராடி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியில் இருந்த அன்புமணி ராமதாஸ் இது குறித்து எந்த விதமான எதிர்ப்போ அல்லது ஏன் ஆதரிக்கிறேன் என்ற விளக்கம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை கொடுக்கவில்லை.மாநிலங்களவையில் பாஜக அரசு கொண்டு வரும் எந்தவொரு மசோதாவிற்கும் இதுவரை பாமக ஏன் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது என்று அரசியல் கட்சியினர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.