Skip to main content

இப்படிப் பண்ணா விலைவாசி உயரும்... ஊர் சுற்றுபவர்கள் அடங்கி இருக்க வேண்டும்... பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656- லிருந்து 18,601 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 559- லிருந்து 590 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842- லிருந்து 3,252 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 47 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 

 

 

 

 


 

 

pmk



இந்த நிலையில் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஊரடங்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு சரியான நடவடிக்கை. இதைத் தான் இன்று காலையிலும் நான் வலியுறுத்தியிருந்தேன். இது தான் மக்கள் நலனுக்கு அவசியமானது. இதை மக்கள் உறுதியாகக் கடைப்பிடித்தால் கரோனா பரவலில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம் என்றும், கரோனா வைரஸ் பரவல் அச்சமும், ஊரடங்கும் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில், தமிழகத்தின் 23 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.30 வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். 
 

http://onelink.to/nknapp


மேலும் சென்னை மருத்துவர் கரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று மட்டும் 3 மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், கரோனா நோயால் நேற்று ஒரே நாளில் 2 காவல் அதிகாரிகளும், 2 பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் களப்பணியாற்றுபவர்கள் எத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இதை உணர்ந்தாவது ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அடங்கி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்