

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது சம்மந்தமான முதல் நடவடிக்கையாக, கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்திற்கான பொள்ளாச்சி தலைமை அலுவலகத்தில் இன்று முதல் கோயம்பத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய 11 பாராளுமன்ற தொகுதிகளின் மாவட்ட, தொகுதி, பகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை துவங்கியுள்ளார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன், பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.