அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சின்னசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், என்னை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 3ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். தொழிற்சங்கத்தில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் தான் இருந்தனர். என்னுடைய கடுமையான உழைப்பினால் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தேன். ஆனால், என்னிடம் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல், என்னை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.