தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர் தமிழ் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் பெயர்களைக் குறிப்பிடும் போது சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. இதனையடுத்து தமிழில் அதன் ஊர்ப் பெயர்களை உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர்ப் பலகைகளிலும் மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுதும் உள்ள 1,014 ஊர்களின் பெயர்களைத் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எடப்பாடி அரசு அண்மையில் போட்ட உத்தரவைப் பல தமிழறிஞர்கள் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள் மத்தியிலேயே விமர்சன அலைகளை எழுப்பியிருக்கிறது. இது தொடர்பான புகார்களும் தமிழ்வளர்ச்சி துறையில் குவியத் தொடங்கியிருக்கிறது. இதைப் பார்த்த சீனியர் அமைச்சர்கள் பலரும், இந்த உத்தரவுக்கான கெஜட் அறிவிப்பாணையை உடனே ரத்து செய்ய எடப்பாடியிடம் வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
-