Skip to main content

தேனியில் கேந்திரியா வித்யாலயா பள்ளியை விரைவில் திறக்க வேண்டும்! மத்திய அமைச்சரிடம் ஓ.பி.ஆர். கோரிக்கை! 

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
o p ravindranath kumar



தேனி மாவட்டத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய வேண்டும் என்று பொது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. அதற்காக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பெரும் முயற்சி மேற்கொண்டார். மேலும் வழக்கமான பின்தொடர்வுகளுடன், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தாலுகாவில் பள்ளி கட்டுவதற்கு எட்டு ஏக்கர் நிலம் அடையாளம் ஒதுக்கப்பட்டுள்ளது.


அந்த புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அது முடிவடையும் வரை தற்காலிகமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் இருபது வகுப்பு அறைகள், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர், கழிப்பறை, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்ட பிற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இதை கேந்திரிய வித்யாலயாவின் தலைமையகத்தின் இணை ஆணையர் சசிகாந்த் தேனியில் பள்ளி அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கையை 2020 மார்ச் மாதத்தில், புது டெல்லியின் கே.வி. ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளார். அதை தொடர்ந்துதான் எம்.பி. ஓ.பி.ஆரும் இந்த கல்வியாண்டில் இருந்து பள்ளி செயல்படுவதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறவர், தற்பொழுது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்லியால்விடமும் பள்ளி திறக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மின்னஞ்சல் மூலமும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்