ரஜினியின் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு டிவி ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் தொடங்கியுள்ளன. ரஜினியின் ஆசியுடன் தொடங்கப்பட்ட அந்த முயற்சியின் எதிரொலியாக ரஜினி என்ற பெயரையே ஒரு வியாபார முத்திரையாக மாற்ற ரஜினி முடிவு செய்துள்ளார்.
இதேபோல் ஸ்டாலினும் தனது பெயரில் ஒரு டிவியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புதிய செய்தி ஆசிரியர் குழுவை உருவாக்கியுள்ளார். அந்தக் குழு ஸ்டாலின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வருகிறது.
இப்பொழுது ரஜினி, ஸ்டாலின் வழியில் தேசிய அரசியல் கட்சிகளும், சேனல் ஆரம்பிப்பதில் போட்டிபோடுகின்றன. இப்பொழுது இருக்கும் தேசிய சேனல்களில் பல பாஜகவுக்கு ஆதவாக இருந்தாலும், பாஜகவுக்கென ஒரு சேனல் வேண்டும் என பாஜக ஒரு சேனலை ஆரம்பிக்கிறது.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் என்.டி.டி.வியில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த பர்கா தத்து அவர்களை தலைவராக கொண்டு ஒரு சேனலை ஆரம்பிக்கிறது.
இந்தியாவில் ஒரு டிவி சேனலை ஆரம்பிப்பதற்கு 150 கோடி ரூபாய் செலவாகும். 150 கோடி ரூபாயும், ஒரு செய்தியாளர் குழுவும் அமைத்துவிட்டால், யார் வேண்டுமானாலும் சேனலை ஆரம்பித்துவிடலாம். இதனால் புற்றீசல் போல சேனல்கள் பெருகி வருகிறது. அந்த வரிசையில் ரஜினியின் சேனலும், ஸ்டாலினின் சேனலும் இடம் பெறுகிறது.