Skip to main content

விவசாய மசோதாவை திரும்பப் பெறக்கோரி கிருஷ்ணகிரியில் தி.மு.க ஆர்ப்பாட்டம்!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் போராட்டங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், வேளாண் மசோதாவை திரும்பப் பெறக்கோரி கிருஷ்ணகிரியில் தி.மு.க சார்பாக கூட்டணிக் கட்சியினர் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, திராவிடர் கழகம் என கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்டனர். தி.மு.க விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மதியழகன் பேசுகையில், "விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மோடியின் அராஜாகப் போக்கிற்கு துணைபோன தமிழக எடப்பாடி அரசின் போக்கைக் கண்டித்தும் எங்கள் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கிறோம். 

 

இந்தச் சட்டத்திற்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம், உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்  ஓ.பி ரவிந்ததிரநாத் ஆதரித்ததற்கான காரணம், 'நாம் மட்டும் நலமாக இருந்தால் போதும்' என்பதுதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்துறையில் நுழைவார்கள், இது உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால், அதற்கு விலையை யார் நிர்ணயிப்பது? விவசாயிகள் சொந்த நிலத்திலேயே கூலியாட்களாக மாற்றப்படும் நிலைவரும். இத்தகைய நிலையை வராமல் தடுக்க, இந்த  மூன்று மசோதாக்களையும் மத்தியஅரசு வாபஸ் பெறவேண்டும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்