Published on 03/06/2019 | Edited on 03/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையோடு, ரெண்டாவது தடவையா மோடி பிரதமர் பதவியை ஏற்கிற நாளில் உலகளவில் அந்த ’நேசமணி ஹேஷ்டாக்’ ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிச்சு மிகப் பெரியளவில் கவனிக்க வச்சிடிச்சி. அதற்கு யார் காரணம் என்று பார்த்தபோது,துபாய்ல வேலை பார்க்குற தூத்துக்குடி மாவட்ட இன்ஜினியர் விக்னேஷ் பிரபாகர் தன்னோட சமூகவலைத்தள குரூப்புல ஒரு சுத்தியல் படம் போட்டு இது என்னன்னு கேட்கப்பட்டிருந்ததை பார்த்துட்டு, அது சுத்தியல்னும் அதால அடிச்சா டங்கு டங்குன்னு கேட்கும் னும், ஜமீன் அரண்மனையில பெயிண்ட்டிங் வேலை எடுத்து செய்த காண்ட்ராக்டர் நேசமணி தலையில அவரோட சொந்தக்காரர் இதைப் போட்டதால ரொம்ப பாவமாயிடிச்சின்னும் ட்விட் பண்ணிருந்தாரு.
அவரு நக்கலா சொன்னது, ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு காமெடியைத்தான். ஆனா, அதை அறியாத அவரோட வடஇந்திய நண்பர் ஒருவர், நேசமணி நலம் பெற பிரார்த்திக்கிறேன்னு ஹேஷ்டாக் போட, அது இந்தளவுக்கு வைரல் ஆகும்னு யாருமே எதிர்பார்க்கலை. மத்திய, மாநில அரசியல் நிலைமைக்கேற்ப நேசமணியை வச்சி பலரும் ஹேஷ்டேக் போட, அது மோடியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்பை மிஞ்சி ட்ரெண்டிங் ஆயிடிச்சி. நேசமணி யாருன்னு நக்கீரனிலிருந்து பி.பி.சி. வரை இணையத்துல கட்டுரை வர ஆரம்பிச்சிடிச்சி. நியூஸ் சேனல்களில் ஸ்பெஷல் செய்தித் தொகுப்பு போட ஆரம்பிச்சிட்டாங்க.
மோடி பதவியேற்கும் நாளில் அதை தெறிக்க விடுற அளவுக்கு, 2000ஆம் வருடம் வடிவேலு நடிச்ச படத்தின் காமெடி ஹிட்டாக, பா.ஜ.க. தரப்பில் கடுப்பாயிட்டாங்க. அதனால ட்விட்டர்ல ரிப்போர்ட் பண்ணி நேசமணி ஹேஷ்டேக்ஸை டெலிட் பண்ணிட்டு மோடி பதவி ஏற்பை முதலிடத்திற்கு கொண்டு வந்தாங்க.நேசமணி ஹேஷ்டேக்கில் இவ்ளோ அரசியலா என்று எல்லார் மத்தியிலும் பெரும் கேள்வியை கிளப்பியுள்ளது.