சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர் பார்திபன், ஆதிமுக சார்பில் கே.ஆர்.எஸ். சரவணன், அமமுக சார்பில் எஸ்.கே செல்வம் ஆகியோர் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 18ம் நடந்த தேர்தலில் 77.57% வாக்குகள் சேலத்தில் பதிவாகின. தற்போது சேலம் மக்களவை தொகுதிகளுக்கான சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹினி முன்னிலையில் அங்கிருந்த முகவர்கள் அனைவரும் வாக்குறுதி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை எண்ண தயாரனபோது திடீரென தபால் துறை அலுவலர் ஒருவர் சில தபால் வாக்குகளை கொண்டுவந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதை பார்த்த அதிமுக முகவர் சண்முகம் மற்றும் சில சுயேச்சை கட்சிகளின் முகவர்கள் அந்த தபால் வாக்குகளை ஏற்க கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தனர். எட்டு மணிக்குள் கொண்டுவந்த தபால் வாக்குகளை மட்டும்தான் எண்ணிக்கைகுள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
உடனே திமுக முகவர்கள் சரியான நேரத்திற்கு உள்ளே வந்துவிட்டார் அதனால் அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இதனால் அந்த அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக ரோஹினி அசாதாரன நிலையை ஏற்படுத்த வேண்டாம். சுமுகமான வாக்கு எண்ணிக்கைக்கு உதவுங்கள். வீடியோ பதிவுகளை பார்த்து முடிவு செய்துக்கொள்ளலாம் என்றார். ஆனால், அதிமுக பிரமுகர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பினார்கள். பின்னர், ஆட்சியர் ரோஹினி அவர்களை சமாதப்படுத்தி வாக்குகளை எண்ண வைத்தார்.
சேலம் மக்களவை தொகுதியில் இராணுவம் மற்றும் தேர்தல் வேலைகளுக்காக மொத்தம் 8838 தபால் வாக்குகள் விண்ணப்பம் கொடுக்கப்பட்டன. இவற்றில் 6575 தபால் வாக்குகள் தரப்பட்டன.
திமுக முகவர் கார்த்திகேயன், வேட்பாளர் எஸ்.ஆர் பார்திபன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு கீழே வந்தனர். அவர்கள் கூறுகையில் தபால் அலுவலர் குறித்த நேரத்திற்குள் இந்த மையத்திற்குள் வந்துவிட்டனர். போலீஸ் பாதுகாப்புகளை தாண்டி வந்தமையால் ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது. ஆகையால், அந்த தபால் வாக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.