நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பற்றிய விவாதமும்,சர்ச்சைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது.இது தமிழக அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ள தோப்பு வெங்கடாசலம் திடீரென கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்து மட்டுமின்றி விரைவில் கட்சியில் இருந்தும் விலகுவார் என்று கூறப்பட்டது. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் தரப்பாடமல் இருந்ததால் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட அமைச்சருடனான கருத்து வேறுப்பட்டால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தனர். இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.இவருடன் அமைச்சர் கருப்பணனும் தேர்தல் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் கருப்பணன் தேர்தல் பணியை சரியாக செய்யவில்லை என்றும் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.அதனால் அதிமுக கட்சியில் தான் வகித்த அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.