தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய வெற்றி வாய்ப்பை தவறவிட்டு விடகூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்திவரும் நிலையில், முடிந்தவரை மற்றவா்களுடைய ஆதரவை பெற்று அமோக வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கான வியூகம் வகுத்தும் செயல்படும் இந்நேரத்தில், அதிமுகவுடன் அமமுக இணைந்து செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜகவின் மூத்த உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சருமாகிய அமித்ஷா வகுத்த திட்டம் நிறைவேறாமல் போகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க அதிமுகவின் நிலை இவ்வளவு மோசமாக உள்ளது என்று சிறையில் கண்ணீா் விட்ட சசிகலா, அதிமுகவும் அமமுகவும் இணைந்து மறைந்த ஜெயலலிதா உயிரோடு இருக்கையில் எப்படி ஒரு கட்டுபாடான கட்சியாக இருந்ததோ அதேபோல் மீண்டும் இருக்கும் என்று நினைத்தார். ஆனால் அவருடைய கனவும் பலிக்காமல் போய்விடும் என்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது.
அமமுகவின் பொது செயலாளா் டிடிவி தனித்து போட்டி என்பதில் மிக உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதை உறுதி படுத்தும் விதமாக திருவாரூா் மாவட்ட அமமுக அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாருமான எஸ்.காமராஜ் அமமுகவின் தோ்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், நான் தற்போது பேச்சை குறைத்து கொண்டேன், அதற்கு பதிலாக செயல்பட ஆரம்பித்துள்ளேன். கடந்த 3 ஆண்டு காலம் பட்ட எல்லா சங்கடங்களும் மறைந்து போகும். பலரும் என்கிட்ட கேட்ட கேள்வி அதிமுகவுடன் இணைந்தால் என்ன என்று. ஆனால் 1974ல் புரட்சி தலைவா் எம்ஜிஆர் திமுகாவில் இருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சி துவங்கினார். ஆனால் அவா் அடுத்த 5 ஆண்டில் முதலமைச்சர் ஆவார் என நினைத்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவரை இந்த நாட்டு மக்கள் முதலமைச்சராக தோ்ந்தெடுத்தனர். அன்று எம்ஜிஆரின் பின்னால் யாரெல்லாம் சென்றார்களோ அவர்கள் எல்லாரும் இன்று அஇஅதிமுகவில் மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவரை தொடர்ந்து புரட்சி தலைவியின் பின்னால் சென்றவர்கள் இன்றுவரை அதே மனிதா்களாக இருக்கிறார்கள். எனவே டிடிவியின் பின்னால் வந்தவர்கள், மனிதா்களாக தான் இருப்பார்கள், ஒருவேளை அப்படி அதிமுகவுடன் இணைந்தால் எங்கள் பின்னாடி தான் வரமுடியும், அவா்கள் பின்னால் நாங்கள் போக மாட்டோம், உதாரணத்திற்கு அஇஅதிமுகவின் திருவாரூா் மாவட்ட செயலாளா் காமராஜ் எனக்கு பின்னாடி தான் வரமுடியும். நான் ஒருபோதும் அவர் பின்னால் செல்ல மாட்டேன். அப்படிபட்ட சூழ்நிலையை சசிகலாவும், டிடிவியும் ஏற்படுத்தி விடமாட்டார்கள் என்று உறுதிபட கூறினார்.
ஒருவேளை அஇஅதிமுகவில் இருந்து யார் வந்தாலும், இங்கு அமமுகவில் பொறுப்பில் இருப்பவா்கள் பின்னால் சென்று கட்சி பணி செய்யுங்கள், இல்லை என்றால் வேறு கட்சிக்கு செல்லுங்கள். எங்கள் கட்சியில் உங்களுக்கு வேலை கிடையாது. 25 ஆண்டு காலமாக துரோங்களையும், பொய்களையும் மட்டுமே சொல்லி வரும் உங்களுக்கு எங்க கட்சியில் இடமில்லை. உங்களை போன்றோருக்காகவே பலர் கட்சி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் செல்லலாம் என்று கூறுவோம்" என்றார்.
இவருடைய இந்த பேச்சு அமமுகவின் நிலைபாட்டை உறுதிர்படுத்தியுளள்ளது. இப்படி பிரிந்து இருக்கும் ஒரு தாய் பிள்ளைகள் எப்படி தோ்தலை சந்திக்க போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.