இடைத்தோ்தல் களமான நாங்குநேரி தொகுதியில் தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் தோ்தல் அலுவலகம் திறந்து தோ்தல் களத்தில் விறு விறுப்பை காட்டி வருகிறது. திமுக தோ்தல் பணிக்குழு, காங்கிரஸ் பணிக்குழு அதே போல் இஜைஞா் காங்கிரஸ் சார்பிலும் தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் இந்த தொகுதியை தமிழகத்தில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் அதோடு ஸ்டாலினும் விரையில் தமிழகத்தின் முதல்வராவா் என மடத்துபட்டி, பொன்னார்குடி, கலந்தநேரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரச்சாரத்தை வேகமெடுத்துள்ளார்.
இதேபோல் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 14 அமைச்சா்கள், 10 மாவட்ட செயலாளா்கள் மற்றும் எம்எல்ஏ க்கள் என பெரும் படையுடன் அதிமுக வேட்பாளா் நாராயணன் பிரச்சாரத்தை துவங்குகிறார்.
இந்தநிலையில் 23-ம் தேதி ஆரம்பித்த வேட்புமனு தாக்கலில் 46 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 1-ம் தேதி நடந்த பரிசீலனையில் 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாம்தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் முருகன் மனுவை வாபஸ் பெற்றதில் இறுதியாக 23 போ் களத்தில் மோதுகின்றனா். காங்கிரஸ் ரூபி மனோகரன், அதிமுக நாராயணன், நாம் தமிழா் ராஜநாராயணன் ஆகியோருக்கு அந்த கட்சி சின்னங்களை தவிர மற்ற 20 பேருக்கும் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாங்குநேரி தோ்தல் களம் சூடு கிளப்பியுள்ளது. வருகிற 21-ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது.