இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த காங்கிரஸின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், திமுக-காங்கிரஸ்கூட்டணி தலைவர்மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் தினேஷ் குண்டுராவ். அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், நடப்பு அரசியல் குறித்தும் இயல்பாக பேசிக்கொண்டனர் என்கிறது அறிவாலய வட்டாரம்.