Published on 04/04/2022 | Edited on 04/04/2022

தமிழகத்தில் 97.05% நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2021ஆம் ஆண்டுவரை கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கும் குறைவாக நகைக்கடன் பெற்ற 13 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைகள் திரும்ப வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 97.05% நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
5 சவரன்களுக்கு உட்பட்ட இந்த நகைக்கடன் தள்ளுபடி மூலம் 12.19 லட்சம் பயனாளிகள் பலனடைந்துள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.