Published on 27/07/2021 | Edited on 27/07/2021

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (27.07.2021) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவிருக்கிறது.