1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு திமுக சார்பாக கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அவரது உருவ பொம்மையும் எரித்தனர். இதனையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து திமுகவினர் போராட்டதை கைவிட்டனர். அதன் பின்னர் திமுகவினர் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு அதில் ஸ்டாலின் பெயர் இருப்பதைக் காட்டி ஆதாரத்தைக் காட்டினர். இதையடுத்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஸ்டாலினிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் இந்நிலையில் துக்ளக் பத்திரிகையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் குருமூர்த்தி, "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்ற கேள்வியும், சர்ச்சையும் அரசியல் களத்தில் எழுந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்மாயில் ஆணையத்தில் இடம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தமிழ்நாடு முழுவதும் மிசாவில் 450 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமான தலைவர்கள் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, சிட்டி பாபு எம்.பி போன்றோர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்கப்பட்டது உண்மை என்று கூறி, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதை ஏற்று கொண்டு அப்போது அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதி அளித்தார்கள்.
மேலும் ஸ்டாலின் என்ன காரணித்திற்காக உள்ள வைத்தார்கள் என்ற ஆதாரம் தேவையில்லை. ஸ்டாலின் மிசா கைதியாக வைக்கப்பட்டதுக்கு காரணம் திமுக கழகத்தை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கிலும், திமுக கழக தலைவர் குடும்பத்துக்கு மன ரீதியான மனஉளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கைது செய்யப்பட்டார்கள். மேலும் அவர் மிசாவில் கைது செய்யப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார். மேலும் அமைச்சர் மபொ. பாண்டியராஜன் எனது நண்பர். என்னுடைய அறிக்கையை தவறாக புரிந்து கொண்டேன் என்று கூறினார். அதற்கு நான், வரலாற்று ரீதியான தவறுகள் ஏற்படும் போது அதை சரி செய்ய வேண்டும் என்று கூறினேன். மேலும் அரசியல் ரீதியாக சண்டை போடும் போது சரியான கருத்துகளை கூறி சண்டை போட வேண்டும். தவறான காரணத்தை கூறி தவறான பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.