Skip to main content

ரூ.14 லட்சத்துக்கு ஏலம்!!! அதிமுக எம்.எல்.ஏ. கணவர் 1307 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வலையூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் பெயரில் ரூ 14 லட்சமும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ரெங்கராஜ் பெயரில் ரூ.10 லட்சமும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு ஆனந்த் பெயரில் ரூ 3 லட்சம் ஏலம் விடப்பட்டதாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலர் சண்முகம் என்பவரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் மனு கொடுத்தனர்.

 

position


 

வாலையூர், பாலையூர், ஸ்ரீ பரம்புதூர், நெ 94 கரியமாணிக்கம் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாலையூர் ஊராட்சியில் மட்டும் ரகசியமாக ஏலம் விடப்பட்டுள்ளது.

 


அதில் தலைவர் பதவிக்கு ரூ10 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ 3 லட்சமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ. 14 லட்சமும் ஏலம் விடப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் சண்முகத்திடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏலம் நடைபெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படும் என கூறினார்.



இதன் பேரில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் சிறுகனூர் காவல்நிலைய்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், ரெங்கராஜ், ஆனந்த் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
 

 

அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் வாலையூர் பஞ்சாயத்தை ஏலம் எடுத்தார் என்கிற பிரச்சாரம் பெரிய அளவில் எடுபட்டு கடைசியில் 1307 வாக்குகள் வித்தியாத்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
 

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 2511 ஓட்டுகள் பெற்று 1307 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 

சார்ந்த செய்திகள்